×

வருசநாடு பகுதியில் தேங்காய் விளைச்சலோ ஜாஸ்தி; விலையோ கம்மி: விவசாயிகள் கவலை

 

வருசநாடு, ஜூலை 10: கடமலை-மயிலை ஒன்றியத்தில் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் காங்கேயம், திருச்சி பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால் தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது 8 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விட்டது. உற்பத்தி அதிகரிப்பு ஒருபுறம் இருக்க ஆந்திரா, கர்நாடக கேரளா மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அரசு நிர்ணய விலை கிடைப்பதற்கு கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் நிரந்தர சந்தை அமைத்திட வேண்டும். அரசே கொள்முதல் செய்து தேங்காய் ஏற்றுமதியில் ஈடுபட வேண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வருசநாடு விவசாயி லோகு கூறுகையில், கடந்த சில மாதங்களாக லாரிகளில் ஏற்றுமதி மிகவும் குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் கடமலை மயிலை ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் காங்கேயம், ஒட்டன்சத்திரம், சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தேங்காய்கள் ஏற்றுமதி வழக்கமாக நடைபெற்று வந்தது. தற்போது வியாபாரிகள் இல்லாமல் தேங்காய் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து தென்னை விவசாயிகளை பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்’’ என்றார்.

The post வருசநாடு பகுதியில் தேங்காய் விளைச்சலோ ஜாஸ்தி; விலையோ கம்மி: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Kadamalaya-Peacock Union ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...